குடும்பங்களுக்கும் சமூகத்திற்குமானது
TB என்பது TB பாக்டீரியா அல்லது கிருமிகளால் ஏற்படுகின்ற ஒரு தொற்றாகும்
TB காற்றின் மூலம் பரவுகிறது
TB சிறப்பு நோய் எதிர்ப்பு மருந்து மூலம் குணப்படுத்தப்படுகிறது
2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்
சளி அல்லது இரத்தத்துடனான இருமல்
காய்ச்சல், குளிர் அல்லது இரவு நேரத்தில் வியர்த்தல்
விரைவாக உடல் எடை குறைதல்
எப்போதும் சோர்வாக இருக்கும் உணர்வு
பசியிழப்பு
கட்டிகள் அல்லது வீக்கம் அல்லது வலி
TB கிருமிகள் உங்களை நோய்வாய்ப்படுத்தாமல் உங்கள் உடலில் செயலற்றது போல் இருக்கலாம்.
உறங்கும் TB கிருமிகளை உங்களால் மற்றவர்களுக்குப் பரப்ப முடியாது
உறங்கும் TB திடீரெனத் தோன்றி உங்களை நோயுறச் செய்யலாம்
TB-யைக் கண்டறிவதற்கான தோல் பரிசோதனை அல்லது இரத்தப் பரிசோதனை மூலம் உறங்கும் TB-யைக் கண்டறிய முடியும்
உறங்கும் TB-க்கு சிறப்பான நோய் எதிர்ப்பு மருந்து கொடுப்பதன் மூலம் TB கிருமிகளை விழிப்படையாமல் இருக்கச்செய்யலாம்.
TB-யால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வாழ்ந்த அல்லது நேரத்தை செலவிட்டவர்கள்
மருத்துவ நிலை ஒன்று உள்ளவர்கள் அல்லது நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டுவருபவர்கள்
இளம் குழந்தைகள்
TB அதிகம் உள்ள நாடுகளில் பிறந்தவர்கள் அல்லது அங்கு வாழ்ந்தவர்கள்
உள்ளூர் TB கிளினிக் அல்லது உங்கள் குடும்ப வைத்தியரை பார்க்கவும்
மார்பு ‘எக்ஸ்-ரே’ எடுக்கவும்
நெஞ்சு சளியின் மாதிரி ஒன்றைப் பரிசோதனைக்காகக் கொடுக்கவும்
TB கிளினிக்குகளில் TB பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அனைவருக்கும் இலவசம்
மேலதிக தகவல்களுக்கு health.nsw.gov.au -விற்குச் செல்லுங்கள்.