அவசர பராமரிப்பு சேவைகள் (Urgent Care Services)

உங்களுக்கு இப்போது மருத்துவ உதவி தேவையா?

அவசரநிலை இல்லாத உடல்நலப் பிரச்சினைகளுக்கு இலவச மற்றும் விரைவான மருத்துவச் சிகிச்சையைப் பெற 1800 022 222 என்ற எண்ணில் healthdirect-ஐ  அழைக்கவும். அவசரகாலத்தில், எப்போதும் மூன்று பூஜ்ஜியங்களை (000) அழைக்கவும்.

இந்தப் பக்கத்தில்

அறிமுகம்

நியூ சவுத் வேல்ஸில் (NSW) அவசர சிகிச்சைப் பிரிவுகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் அவசர பராமரிப்பு சேவைகள் (Urgent Care Services) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஓய்வில்லாதவாறு இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவில் மக்களை காத்திருக்க விடாமல், அவசரநிலை இல்லாத நோய் அல்லது காயத்திற்கு மக்களுக்குத் தேவையான சிகிச்சையை இந்தச் சேவைகள் விரைவாக வழங்குகின்றன.

இந்தச் சேவைகளில் பல மருத்துவப் பயிற்சியாளர்கள் மற்றும் எக்ஸ்ரே, நோயியல்(pathology) உள்ளிட்ட நோயறிதல் உபகரணங்களைக் கொண்டுள்ளன, எனவே பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

  • சிறிய வெட்டுக்கள்
  • சுளுக்கு அல்லது சந்தேகத்திற்குரிய எலும்பு முறிவுகள்
  • விளையாட்டு காயங்கள்
  • சிறிய தொற்றுகள்
  • சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs)
  • சிறிய தீக்காயங்கள்
  • தடிப்புகள்
  • பூச்சி அல்லது விலங்கு கட
  • இருமல், சளி அல்லது காய்ச்சல்
  • லேசான ஆஸ்துமா தாக்குதல்கள்
  • காதுவலி
  • காய்ச்சல் அல்லது குளிர்.

தகமை

நீங்கள் பின்வரும் அனைத்து நிலைகளுக்கும் தகுதி பெறும் பட்சத்தில் அவசர பராமரிப்பு சேவையை (Urgent Care Service) அணுக நீங்கள் தகுதி பெறலாம்:

  • NSW அல்லது அதன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சமூகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்
  • அவசரநிலை இல்லாத கடுமையான காயம் அல்லது நோயை அனுபவிப்பவர்
  • அடுத்த 2 முதல் 12 மணி நேரத்தில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர் மற்றும்
  • தங்களின் குடும்ப மருத்துவர் (GP) அல்லது அருகிலுள்ள மருத்துவ மையங்களில் சந்திப்பைப் பெற முடியாதவர்

எப்படி அணுகுவது

Healthdirect-ஐ 1800 022 222 இல் எந்த நேரத்திலும் இலவசமாக அழைக்கவும் (24 மணிநேரம், வாரத்தில் 7 நாட்கள்)

ஒரு பதிவு செய்யப்பட்ட செவிலியர் (RN) உங்கள் அழைப்பிற்கு பதிலளிப்பார் மற்றும் உங்கள் நிலை குறித்து சில கேள்விகளைக் கேட்பார்.

பதிவுசெய்யப்பட்ட செவிலியரால் செய்யப்பட்ட மதிப்பீட்டைப் பொறுத்து, நீங்கள் அவசர பராமரிப்பு சேவைக்கு (Urgent Care Service) பரிந்துரைக்கப்படலாம்.

நீங்கள் அவசர பராமரிப்பு சேவைக்கு (Urgent Care Service) பரிந்துரைக்கப்பட்டால், பதிவு செய்யப்பட்ட செவிலியர் சேவையை அணுகுவதற்கான விவரங்களை உங்களுக்கு வழங்குவார்.

உங்கள் நிலையைப் பொறுத்து, பதிவு செய்யப்பட்ட செவிலியர் உங்களுக்கான மாற்று சிகிச்சை தெரிவுகளை  பரிந்துரைக்கலாம்.

உங்களுக்கு கூடுதல் ஆதரவுதவி தேவையா?

  • 131 450 இல் மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்புச் சேவையை (TIS) மொழி ஆதரவுதவிக்காக அழைக்கவும்.
  • செவித்திறன் அல்லது பேச்சு ஆதரவுதவிக்கு National Relay Service -ஐ தொடர்பு கொள்ளவும்.

கட்டணம் மற்றும் கட்டணங்கள்

நீங்கள் அவசர பராமரிப்பு சேவைக்கு (Urgent Care Service) பரிந்துரைக்கப்பட்டிருந்தால், பின்வருபவை உங்களிடம் இருக்கும்பட்சத்தில் உங்கள் சிகிச்சையுடன் தொடர்புடைய செலவு எதுவும் உங்களுக்கு இருக்காது

  • செல்லுபடியாகும் மெடிக்கேர் அட்டை அல்லது
  • சமூகம் சார்ந்த புகலிடக் கோரிக்கையாளர்

இரண்டுமே உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால், வேறு சேவையில் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படலாம் என்பதையும் உங்கள் சிகிச்சையுடன் தொடர்புடைய செலவுகள் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

உங்களுக்கு ஏதேனும் நிதி சார்ந்த கவலைகள் இருந்தால், உங்கள் சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமான சிகிச்சை தெரிவை healthdirect உங்களுக்கு வழங்க முடியும்.

சேவை வழங்கப்படும் இடங்கள்

பின்வரும் இடங்களில் அவசர பராமரிப்பு சேவைகள் (Urgent Care Services)  அமைந்துள்ளன:

  • பெருநகர சிட்ன
  • இல்லவாரா
  • மத்திய கடற்கரை
  • ஹண்டர் வேல்லி
  • நியூ இங்கிலாந்து
  • மத்திய வடக்கு கடற்கர
  • வடக்கு NSW
  • தெற்கு NSW
  • மேற்கு NSW

நீங்கள் இந்தப் பகுதிகளுக்கு வெளியே இருந்தால், அல்லது healthdirect-இல் பதிவுசெய்யப்பட்ட செவிலியர் உங்களுக்கு இது மிகவும் பொருத்தமான சிகிச்சை தெரிவாக இருக்கும் என்று முடிவுசெய்தால் , தொலைபேசி அல்லது காணொளி (telehealth ) வழியாகவும் அவசர பராமரிப்பு  சேவைகள் (Urgent Care Services)  கிடைக்கும்.

திறக்கும் நேரம்

அவசர பராமரிப்பு சேவைகள் (Urgent Care Services) பொது விடுமுறை நாட்கள் உட்பட தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும். மாற்றாக, telehealth (தொலைபேசி அல்லது காணொளி வழியாக சேவை) 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் கிடைக்கும்.

அரசு வழங்கும் உறுதி

ஆஸ்திரேலிய அரசுடன் இணைந்து NSW மாநில அரசின் ஆதரவுதவியின் காரணமாக NSW ஹெல்த் பொதுமக்களுக்கு அவசர பராமரிப்பு சேவைகளை (Urgent Care Services) வழங்க முடிகிறது.

NSW மாநில அரசு 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் NSW-இல் 25 அவசர பராமரிப்பு சேவைகளை (Urgent Care Services) வழங்க இரண்டு ஆண்டுகளுக்கு $124 மில்லியன் நிதியுதவி வழங்க உறுதி அளித்துள்ளது.

NSW-இல் மெடிகேர் அவசர பராமரிப்ப கிளி​னிக்குகள (Medicare Urgent Care Clinics) வழங்குவதற்கும் ஆஸ்திரேலிய அரசு நிதியுதவி வழங்க உறுதி அளித்துள்ளது.

வளங்கள்

எங்களின் ஆயத்த தகவல் தொடர்பு வளங்கள் மூலம் உங்கள் சேனல்கள் மூலம் அவசர பராமரிப்பு சேவைகள் (Urgent Care Services) பற்றிய செய்தியை பரப்ப எங்களுக்கு உதவுங்கள்.

வளங்களை இங்கே பார்வையிடவும்​​

Current as at: Thursday 29 August 2024
Contact page owner: System Purchasing